🏝இலங்கையில் முகத்தை மூடியவாறு செல்ல தடை🚫-அதிபர் 🤵சிறிசேனா⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏝இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று ⛪கிறிஸ்தவ ஆலயங்கள், 🏨சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து 💣குண்டுகள் வெடித்தன. 👥9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள்😳. இதில் 259 பேர் கொல்லப்பட்டனர்😟. 500க்கும் மேற்பட்டவர்கள் 🤕காயம் அடைந்த இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள்🙄 பொறுப்பேற்றனர். இலங்கையில், தொடர்ந்து பதற்றம்😨 நீடித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கையில் பொது இடங்களில் பர்கா உள்பட முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு அந்நாட்டு 🏛அரசு தடை🚫 விதித்துள்ளது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை அதிபர் 🤵சிறிசேனா இதற்கான உத்தரவை⚖ பிறப்பித்துள்ளார்😯. இந்த உத்தரவில்⚖, "💪பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முகத்தை மூடும் வகையிலான உடைகளை அணிய யாருக்கும் அனுமதியில்லை" என்று அதிபர் 🏢அலுவலகம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬