செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு ✍🏻நிபந்தனையுடன் முன் 📜ஜாமீன்

  |   செய்திகள்

காங்கிரஸ் 👤வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக 🎤பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட 👥தொண்டர்களுடன் மாவட்ட 💺ஆட்சியர் இல்லத்திற்கு செந்தில் பாலாஜி சென்றிருந்தார். இதனையடுத்து, இரவு 12 மணிக்கு மேல் தன்னுடைய இல்லத்திற்கு வந்து 😠மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக செந்தில் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3⃣ பேர் மீது மாவட்ட 💺ஆட்சியர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் 👮‍♂காவல் துறையினர் வழக்கு ✍🏻பதிவு செய்தனர். இந்த வழக்கில் ⛓கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, வழக்கறிஞர் செந்தில்குமார் 📜மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் "வாரத்தில் 3⃣ நாட்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் ✍🏻கையெழுத்திட வேண்டும்" என்ற 📜நிபந்தனையுடன் மூவருக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬