🗿சிலை கடத்தல் பிரிவு விவகாரம் - தமிழக அரசுக்கு 🏛உயர்நீதிமன்றம் 🗣கண்டனம்

  |   செய்திகள்

🗿சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் 🏛உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு ⚖நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 🗣விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு 🏢அலுவலகத்துக்கு இருக்கைகள் கூட 🤷‍♂வழங்கப்படவில்லை எனவும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக அரசு 🤷‍♂ஒத்துழைப்பதில்லை எனவும் ⚖நீதிபதிகள் கண்டனம் 🎙தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த 🏛அரசு வழக்கறிஞர், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 101 சதவீத வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது 🙅‍♂தவறான தகவல் எனவும் 🗣கூறினார். இதனையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு செய்து கொடுத்த உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து 📜அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ⚖நீதிபதிகள் ✍🏻உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬