🏛தமிழக சட்டமன்ற தொகுதி 🗳இடைத்தேர்தலுக்கான 📜மனுத்தாக்கல் நிறைவு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
🏛தமிழகத்தின் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு 📆22ம் தேதி இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் 🎉தொடங்கியது. 🌱அதிமுக, 🌞திமுக, 🎁அமமுக, 🔦மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன👍. ஏராளமான 👤சுயேட்சை வேட்பாளர்களும் 📜மனுதாக்கல் செய்து வரும் நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கலும் நிறைவடைகிறது. மேலும், 📜மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற 📆2 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. 📆மே 19ம் தேதி இறுதிக்கட்ட 👥மக்களவைத் தேர்தலுடன் இந்த நான்கு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே பாப்பிரெட்டிபட்டி, பூந்தமல்லி. கடலூர் உள்ளிட்ட 🏛10 இடங்களில் 🗳மறுவாக்குப் பதிவு நடத்துவது குறித்த அறிவிப்பை 👆தேர்தல் 🏢ஆணையம் இன்று வெளியிடும்😯 என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬