🗳தேர்தல் நடத்தை விதிகளை மீறி 🗣பேசுவதாக 💺மோடி மீது காங்கிரஸ் வழக்கு ❗

  |   செய்திகள்

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவிற்கு 🗳வாக்கு சேகரித்து வரும் 💺பிரதமர் மோடி மற்றும் பாஜக 💺தலைவர் அமித் ஷா ஆகிய இருவரும், ஒவ்வொரு மேடையிலும் புல்வாமா 💣தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் குறித்தும், பாலகோட் 💣தாக்குதல் குறித்தும் 🗣பேசி வருகின்றனர். 💺பிரதமர் மோடியின் இந்தப் 🗣பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல் என்று காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் 🏛ஆணையத்தில் 🗣புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், 💺பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை 🤷‍♂எடுக்கவில்லை எனக்கூறி 🏛உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை 🗣விசாரணைக்கு வரவுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬