நீதிமன்ற அவமதிப்பு வழக்கு😳-🏛உச்சநீதிமன்றத்தில் பதில் 📜மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற 🗳தேர்தல் பிரசார🎙 கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். 🛩ரபேல் விவகாரத்தில் மோடி திருடன் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து அவர் மீது 🏛நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது😯. இந்த வழக்கு விசாரணையின்🗣 போது தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம்😟 தெரிவித்தார். கடந்த 📆23ம் தேதி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு🗣 வந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி 🙏கோரிக்கை விடுத்தார். இந்த 🙏கோரிக்கையினை நிராகரித்த🚫 நீதிமன்றம் ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை🗣 ஏப்ரல் 📆30ம் தேதி நடைபெறும் என அறிவித்தனர்🔈. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து ராகுல் காந்தி இன்று புதிய 📄பிரமாணபத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "எனக்கு அரசியல் லாபத்திற்காக 🏛நீதிமன்றத்தை இழுக்கும் எண்ணம் எல்லாம் கிடையாது🚫. நான் பேசியதற்காக வருத்தம்😟 தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬