🏛லோக்சபா தேர்தலுக்கான 🗳4 ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது🎉

✍இளவேனில்🌄

ஏழுகட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது🙂. இன்று நடைபெறும் 🗳நான்காம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் நடைபெறும் நிலையில், 👥945 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்🎉. ஒடிசா, மத்தியப் பிரதேசத்தில் தலா 6 இடங்களிலும், மேற்குவங்கத்தில் எட்டு இடங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 🏛மகாராஷ்ட்ராவின் மும்பை உள்ளிட்ட 17 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும், ராஜஸ்தான், 🏛உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், 🏛பீகாரில் 5 தொகுதிகள், 🏛ஜார்க்கண்டில் 3 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது😯. ஜம்மு காஷ்மீரில்🏔, அனந்த்நாக் தொகுதிக்கு இன்று இரண்டாம் சுற்று தேர்தல் 🗳வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாவது சுற்று அடுத்தக்கட்ட வாக்குப்பதிவின்போது நடைபெறும்😐 என்று கூறப்பட்டுள்ளது🗣. இதற்கிடையே, தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு 🗳வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பலத்த 💪பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬