⌚6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் ஃபானி புயல்☔-வானிலை மையம்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
🏛சென்னைக்கு தென்கிழக்கே 880 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபானி புயல், ⌚6 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், ⌚24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறக்கூடும்😯 என்றும், வடமேற்கு திசையில் நகரும் என்றும், 📆ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் 🏛வடதமிழகம்-தெற்கு ஆந்திரா 🌊கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வரக்கூடும்😳 என்றும், பின்னர் திசைமாறி, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரக்கூடும்😐 எனவும் வானிலை மையம் கணித்துள்ளது👍. இந்த புயலானது 🏛தமிழக 🌊கடற்கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை🚫 என்றும் நேரடியான பாதிப்பு ஏதும் இல்லை😌 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியை புயல் நெருங்கி வரும் வேளையில், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான ☔மழை பெய்ய வாய்ப்புள்ளது. 🐠மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல வேண்டாம்❌ என்று கூறியுள்ள நிலையில், ஆழ்கடல் 🦈மீன்பிடிப்புக்கு சென்றுள்ள 👥மீனவர்களையும் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬