[chennai] - ஃபானி புயல் எதிரொலி மே 2 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

  |   Chennainews

சென்னை: ஃபானி புயலின் தாக்கத்தால் வடதமிழக கடலோர பகுதிகளில் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கொந்தளிப்பாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் வடதமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 870 கி.மீ. தொலைவில் ஃபானி புயல் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து தீவிர புயலாகவும், நாளை அதிதீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். மே 1 ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் - தெற்கு ஆந்திரா கரைக்கு அருகில் 300 கி.மீ. தொலைவு வரை வரும், பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். மழையைப் பொறுத்தவரை ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் வடதமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காற்றைப் பொறுத்தவரை வடதமிழக கடற்கரை பகுதிகளில் நாளை பலத்த காற்று வீசக்கூடும்....

போட்டோ - http://v.duta.us/nW1nvAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/o7tU9gAA

📲 Get Chennainews on Whatsapp 💬