[chennai] - ஃபானி புயல்...... 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்: வானிலை மையம் தகவல்

  |   Chennainews

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 880 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபானி புயல், 6 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஃபானி புயல் வடமேற்கு திசையில் நகரும் என்றும், ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வரக்கூடும் என்றும், பின்னர் திசைமாறி, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஃபானி புயல் தமிழக கடற்கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் நேரடியான பாதிப்பு ஏதும் இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியை புயல் நெருங்கி வரும் வேளையில், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

போட்டோ - http://v.duta.us/OZyo-wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Ie-KVAAA

📲 Get Chennainews on Whatsapp 💬