[chennai] - இடுப்பில் நிற்காத டவுசரை விற்ற கடைக்கு 20 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

  |   Chennainews

சென்னை: இடுப்பில் நிற்காத டவுசரை விற்பனை செய்த துணி கடைக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா நகர், வி.வி.கோயில் தெருவை சேர்ந்தவர் மார்டீன் மணிவண்ணன். இவர் கடந்த 2008ம் ஆண்டு எழும்பூர் சி.என்.சி சாலையில் உள்ள துணிக்கடையில் 34 இன்ச் இடுப்பளவு கொண்ட 4 டவுசரை ₹2,243 கொடுத்து வாங்கியுள்ளார். வீட்டுக்கு சென்ற மார்டீன் புதியதாக வாங்கிய டவுசரை போட்டு பார்த்தபோது, ஒரு டவுசர் இடுப்பளவு சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால், மீண்டும் கடைக்கு சென்று அளவு சரியில்லாத டவுசரை மாற்றிதரும்படி கேட்டுள்ளார். அப்போது, கடை ஊழியர்கள் 2 நாள் கழித்து வரும்படி கூறியுள்ளனர். அதன்படி சென்று கேட்டபோதும், அவர்கள் டவுசரை மாற்றி கொடுக்காமல் அலைகழித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மார்டீன், கடந்த 2009ம் ஆண்டு மேற்கண்ட கடைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும் எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து மார்டீன் சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது துணிக்கடை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வாடிக்கையாளர் வாங்கி சென்ற துணிகளை மாற்றி தரும் வழக்கம் எங்கள் கடைக்கு இல்லை, என்று கூறியுள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/X39siwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/kSjSzwAA

📲 Get Chennainews on Whatsapp 💬