[chennai] - சாலை விபத்தில் மாணவன் சாவு

  |   Chennainews

புழல்: அமைந்தகரை பொன் வேப்பிலை தோட்டம் 6வது தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் கார்த்திக் (12). அங்குள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர், அன்னை சத்யா தெருவில் வசிக்கும் தனது உறவினர் கரிக்கோல்ராஜ் வீட்டுக்கு கார்த்திக் விடுமுறைக்காக வந்திருந்தான்.நேற்று முன்தினம் இரவு கரிக்கோல்ராஜ் செங்குன்றத்துக்கு கார்த்திக்கை பைக்கில் அழைத்து சென்றார். பின்னர் இருவரும் இரவு 11 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். செங்குன்றம் அடுத்த எம்ஏ நகர் சர்வீஸ் சாலையில் வந்தபோது, அங்கு நின்றிருந்த லாரியின் மீது கரிக்கோல்ராஜ் ஓட்டி வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பைக்கை ஓட்டி வந்த கரிக்கோல்ராஜ் படுகாயமடைந்தார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கார்த்திக்கின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

போட்டோ - http://v.duta.us/HtI25AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/mJ6e5AAA

📲 Get Chennainews on Whatsapp 💬