[chennai] - போலீசாரின் ஆசியுடன் 24 மணி நேர டாஸ்மாக் பார்கள்: நிம்மதி இழந்த சேலையூர் மக்கள்

  |   Chennainews

தாம்பரம்: சேலையூர் பகுதியில் கலால் போலீசாரின் ஆசியுடன் டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை, வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், கடைகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவை இப்பகுதியில் அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள பாரத மாதா சாலை, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை, சேலையூர் - அகரம்தென் சாலை உட்பட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் அருகில் அமைத்துள்ளன. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட டாஸ்மாக் பார்களை ஒட்டி அமைந்துள்ள பார்களில், அரசு விதிமுறையை மீறி, 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. தினசரி விடிய விடிய மது விற்பனை நடைபெறுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான குடிமகன்கள் இந்த பார்களுக்கு படையெடுத்து வருகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/hHm7ogAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/T_OLgwAA

📲 Get Chennainews on Whatsapp 💬