[chennai] - பொள்ளாச்சி பாலியல் வழக்கு : தமிழக அரசு அரசாணையின்படி ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

  |   Chennainews

சென்னை : பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மணிவண்ணன் என்பவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. குற்றாவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான 5 பேரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரையும் கணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்னன் ஆகியோரின் நீதிமன்ற காவலை வரும் மே 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்....

போட்டோ - http://v.duta.us/H4PvfwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/JwJ47AAA

📲 Get Chennainews on Whatsapp 💬