[coimbatore] - உக்கடம் அடுக்குமாடி குடியிருப்புகளில் கேபிள் டிவி ஒயர்களை துண்டித்த அதிகாரிகள்; முறையான அனுமதி பெறாததால் நடவடிக்கை

  |   Coimbatorenews

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கோயமுத்தூர் கோட்டம் சார்பாக உக்கடம் திட்டபகுதியில் ( புல்லுகாடு ) அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2018 டிசம்பர் 17ம் தேதி தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்து வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்த பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இந்தப் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடியேறி வந்துள்ளனர் இந்த குடியிருப்பு களுக்கு கேபிள் டிவி இணைப்பு வழங்கு வதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக சுல்தான் என்பவருக்கு முறையாக அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நினையில் உக்கடம் பகுதி (புல்லுகாடு ) அடுக்கு மாடி குடியிருப்பில் அனுமதி இல்லாமல் அத்து மீறி வீடுகளுக்கு கேபிள் டிவி இனைப்பு வழங்கிய கோவை உக்கடம் GM நகர் பகுதியை சேர்ந்த பாபு , குஞ்சா என்பவரின் கேபிள் டிவி ஆப்ரேட்டரின் கேபிள் டிவி மெயின் இனைப்பு ஒயர்களை காவல்துறை உதவியுடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உதவி பொறியாளர் வெங்கட் அவர்கள் தாலைமையில் ஆக்கிரமைப்பு ஒயர்களை துன்டித்து அப்புறபடுத்தினர்....

போட்டோ - http://v.duta.us/oNHAeQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/cM4ZpQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬