[coimbatore] - கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!

  |   Coimbatorenews

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறையிடமிருந்து சில அறிவுரைகளும், கோரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது!!

கோடை விடுமுறையை குடும்பத்துடன் செலவிட விரும்புவர்களின் தேர்வு கொடைக்கானல் அல்லது ஊட்டியாக தான் இருக்கும். கோடை வெப்பத்தைத் தணிக்க பல சுற்றுப்பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில முக்கிய தகவல்களைக் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி கொடைக்கானலில் வீதிமீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதனால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கும் விடுதிகளின் முன்பதிவை ஆன்லைன் மூலம் உறுதி செய்து கொண்டு பயணத்தைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொடைக்கான‌லில் அதிக‌மாக‌ க‌ட்ட‌ண‌ம் வ‌சூல் செய்யும் த‌ங்கும் விடுதிக‌ள் மீது சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் புகார் அளித்தால் உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும். சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் போக்குவ‌ர‌த்து நெரிச‌லில் சிக்காம‌ல் இருக்க‌ ஒரு வ‌ழிப்பாதை அம‌ல்ப‌டுத்த‌ப்பட்டுள்ள‌து. எனவே போக்குவ‌ர‌த்து போலீசாருக்கு சுற்றுலாப்ப‌யணிகள் ஒத்துழைப்பு கொடுக்க‌வும் கோரிக்கை காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

போட்டோ - http://v.duta.us/WZYltwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ma28kAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬