[coimbatore] - கைப்பந்து உள் விளையாட்டரங்கம் வேண்டும் ;சின்னதடாகம் வீரர்கள் காத்திருப்பு

  |   Coimbatorenews

சின்னதடாகத்தில் கைப்பந்து உள் அரங்கு மைதானம் அமைக்க வேண்டும் என்ற கைப்பந்து விளையாட்டு வீரர்களின் கனவு, கானல் நீராகிவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தின் கைப்பந்து கிராமம் என, கூறும் அளவுக்கு சின்னதடாகத்தை சேர்ந்தவர்கள் கடந்த, 55 ஆண்டுகளுக்கும் மேலாக கைப்பந்து விளையாட்டை ஒரு தவமாக விளையாடி வருகிறார்கள். இங்கு மகளிர், இளைஞர்கள், மாணவர்களுக்கு என, தனித்தனியாக கைப்பந்து குழுக்கள் உள்ளன. அண்மையில் நடந்த இந்தியா ஊரக விளையாட்டுப் போட்டியில் தடாகம் வீரர்கள் பங்கேற்று, தமிழ்நாடு அணியை முதலிடம் பெறச் செய்துள்ளனர்.

இது மட்டும் அல்லாமல், இப்போட்டியில் சிறந்து விளங்கியதால் பலர் வங்கி, அரசு ஆசிரியர், வருமான வரித்துறை, போலீஸ் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர்.இக்கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளதால் ஆண்டின் நான்கு மாதங்கள் காற்று, மழை என இருக்கும். அப்போது திறந்தவெளியில் கைப்பந்து விளையாட முடியாது.

இதனால் மாவட்ட, மாநில, தேசிய அளவில் பயிற்சி பெற விரும்பும் வீரர்கள், கோவை நகருக்கோ அல்லது பிற இடங்களுக்கோ செல்ல வேண்டிய அவலம் உள்ளது.தடாகம் வாலிபால் கிளப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், ''சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கைப்பந்து உள்விளையாட்டு அரங்கை அமைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்....

போட்டோ - http://v.duta.us/Val3owAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/91YFagAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬