[coimbatore] - கோவை நகருக்குள் வருகிறது சைக்கிள் பாதை; 8 குளங்களுக்கு செல்லலாம்

  |   Coimbatorenews

மாநகராட்சியிலுள்ள 8 குளங்களையும் இணைக்க பொலிவுறு நகரம் திட்டத்தில் சைக்கிள் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தில் ரூ.1100 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், நரசம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வம்பதி குளம் மற்றும் குமாரசாமி குளம் ஆகிய 8 குளங்களையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் செல்வசிந்தாமணி குளம் ஆகிய மூன்று குளங்களிலும் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உக்கடம் பெரியகுளத்தில் வடக்கு கரையில் நடைப்பாதை, பூங்கா, சைக்கிள் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோல் அனைத்துக் கரைகளும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 8 குளங்களிலும் பொலிவுறு நகரம் திட்டத்தில் பொழுதுப்போக்கு பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 8 குளங்களையும் இணைக்கும் வகையில் சைக்கிள் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/NXkHvQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/eZ_towAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬