[coimbatore] - கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி; திடீர் பரபரப்பு

  |   Coimbatorenews

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது வீட்டிலேயே ஆடு மற்றும் நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அவர் அவற்றை விற்று தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டிய காவல் துறை அதிகாரி ஒருவர் ஆடு மற்றும் நாய் வளர்ப்பினால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் சுகாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறி செல்வராஜை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சம் அடைந்த செல்வராஜ் காவல்துறையில் புகார் அளித்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று எண்ணி இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது பிள்ளைகள் மனைவி மற்றும் தன் மீதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஆட்சியர் அலுவலகத்தில் நின்றிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் அவர் கையிலிருந்த தீப்பெட்டி மற்றும் பெட்ரோலை பிடுங்கி அவர்களை காப்பாற்றினர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது....

போட்டோ - http://v.duta.us/4vTHBAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/nsB4iQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬