[coimbatore] - கோவை ரயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பாதை மூடப்பட்டது

  |   Coimbatorenews

கோவை ரயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பாதையாக இருந்து வந்த தாமஸ் கிளப் ஒட்டிய வழித்தடம், 'காம்பவுண்ட்' சுவர் அமைத்து மூடப்பட்டது.

கோவை ரயில்வே ஸ்டேஷனில், தினமும் கடந்து செல்லும், 72 ரயில்களில், 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். ஸ்டேட் பாங்க் ரோட்டில் பிரதான நுழைவாயிலும், கூட்ஷெட் ரோட்டில் பின்புற நுழைவாயிலும், பயணிகள் பயன்பாட்டுக்காக உள்ளது.

இது தவிர, எஸ்.பி., அலுவலகம் வழியாக, தாமஸ் கிளப் ஒட்டியும் ஸ்டேஷன் சென்றுவர மூன்றாவது பாதை பயன்பாட்டில் இருந்தது.மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்வோர், இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வழித்தடம் அடிக்கடி மூடப்படுவதும், பின்னர் திறக்கப்படுவதுமாக இருந்தது.

இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு குறைவு காரணமாக, ரயில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. தற்போது, ரயில்வே வாரியம் நாடு முழுவதும், பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டதை அடுத்து, இந்த வழித்தடம் ஆறு அடி காம்பவுண்ட் சுவர் மூலம் மூடப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபடுவோர், டிக்கெட் எடுக்காதவர்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தியதாக தகவல் வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி இந்த பாதை மூடப்பட்டுள்ளது' என்றன

போட்டோ - http://v.duta.us/ibsJCwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/mUoEvQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬