[coimbatore] - வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும்?

  |   Coimbatorenews

அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், பருப்புக்களை சாப்பிடுவதால் அந்தப் பருவத்தின் சீதோஷ்ணத்தை தாக்குப் பிடிக்கும் ஆற்றலை அவை நமக்கு அளிக்கும். அவ்வகையில் இந்த சீசனில் கிடைக்கும் வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. கொழுப்பு, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.

ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலை ஒரு முழுமையான உணவு ஆகும். நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும். வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.

குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது. பாஸ்பரஸ், உப்பு சத்துக்கள், புரத சத்துக்கள் வேர்க்கடலை அதிகம் அடங்கி உள்ளது. இதிலுள்ள கால்சியம், பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்து, மூளையையும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்....

போட்டோ - http://v.duta.us/JsE8rwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/aTKQyQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬