[coimbatore] - வால்பாறை மலைச்சாலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாத Target Zero-வின் 46-வது வார களப்பணி

  |   Coimbatorenews

கோவை மாவட்டம் ஆழியாறு - வால்பாறை வனப்பகுதிகளில் Target Zero அமைப்பு இளைஞர்கள் குழு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் இறங்கியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 46-வது வாரமாக இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே களப்பணியினை மேற்கொண்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.

இக்களப்பணியினை குறித்து Target Zero பாலா அவர்கள் கூறியதாவது...

டார்கெட் ஜீரோ குழுவின் தொடர்ச்சியாக நடைபெற்ற 46 வது களப்பணி வால்பாறை செல்லும் சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே இருந்த இடத்தில் இருந்து சுமார் பத்து பைகளில் முள் செடிகளுக்கு மத்தியில் இருந்த கழிவுகளை கயிறு கட்டி கீழே இறங்கி அகற்றினோம்....

கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக தான் இன்றைய களப்பணியும் இருந்தது ஒரே இடத்தில் தோண்ட தோண்ட பிளாஸ்டிக் குவியல்கள் வந்து கொண்டு இருக்கிறது... இன்னமும் அடுத்த மூன்று வாரங்களுக்கு அங்கு எடுப்பதற்கு இருக்கிறது.... முள் செடி, சறுக்கும் மண், பள்ளமான இடம் உயரமான மலை சரிவு என இடர்பாடுகள் இருந்தாலும் நம்பிக்கையுடன் இயங்குகிறோம்.......

போட்டோ - http://v.duta.us/8bPnqQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/B8kpMwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬