[coimbatore] - வெளியானது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; திருப்பூர் மாவட்டம் முதலிடம்

  |   Coimbatorenews

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியான தேர்வு முடிவுகளில், மொத்தம் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 93.3% மாணவர்களும், 97% பேர் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு 98.53% தேர்ச்சி அடைந்து திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 89.98% தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது....

போட்டோ - http://v.duta.us/RUYuYgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HjWgXwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬