[tamil-nadu] - அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் 20 ஆண்டு வசூல் ஆகாமல் இருந்த வாடகை பாக்கி 14.54 லட்சம் வசூல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 20 ஆண்டுகள் வசூல் ஆகாமல் இருந்த வாடகை பாக்கி ரூ.14 லட்சத்து 54 ஆயிரத்தை நாகராஜாகோயில் மேலாளர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி நடவடிக்கை மூலம் வசூலித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள கட்டிடங்கள், காலி மனைகளில் வசிப்பவர்கள் உரிய வாடகை செலுத்தாமல் உள்ளனர். இந்த வகையில் அறநிலையத்துறைக்கு பல லட்சம் வசூல் செய்யப்பட வேண்டி உள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி ஆய்வு செய்து நிலுவையில் உள்ள வாடகை பாக்கிகளை வசூலிக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் மேற்பார்வையில் அந்தந்த கோயில் மேலாளர்கள் தலைைமயில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வாடகை பாக்கிகளை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நாகராஜா கோயிலுக்கு சொந்தமான காலி மனைகளில் குடியிருக்கும் பலரும் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த வாடகை பாக்கியை வசூலிக்க கோயில் மேலாளர் ரமேஷ்குமார் தலைமையில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக நாகர்கோவில் பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோயில் மற்றும் மணியடிச்சான் கோயில் அருகில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி மனையில் குடிசை அமைத்து குடியிருப்பவர்களிடம் வாடகை பாக்கி வசூலிக்கும் வகையில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது....

போட்டோ - http://v.duta.us/xDgZmwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/a4Vm0wAA