[tamil-nadu] - ஆகாய கங்கை அருவியில் குளித்த போது கற்கள் விழுவதால் சுற்றுலா பயணிகள் காயம்; வெடி வைக்கும் பணியை நிறுத்த கோரிக்கை

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் ஆகாயகங்கை அருவியின் அருகே, நீர்மின் திட்டத்திற்கு வெடி வைத்தபோது கற்கள் விழுந்ததில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். கொல்லிமலைக்கு கோடை விடுமுறையையொட்டி, பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொல்லிமலை, வளப்பூர்நாடு பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்கின்றனர்.

தற்போது, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருகே, நீர்மின் திட்டத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, மலையில் உள்ள பாறைகள் வெடி வைத்து, வெட்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது. வெடி வைக்கும் போது அதிலிருந்து சிதறும் சிறு,சிறு கற்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையை சேர்ந்த கார்த்திக்(32) தனது குடும்பத்தினருடன் கொல்லிமலைக்கு வந்திருந்தார். அவர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது, கற்கள் விழுந்ததில் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பினர். இச்சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கொல்லிமலையில், தற்போது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருகே நீர்மின் திட்டத்திற்கு 4 தடுப்பணைகள், சுரங்க பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாறைகளை உடைக்க வெடி வைக்கும்போது, அதில் இருந்து சிதறும் கற்கள் அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது விழுகிறது. எனவே, கோடை விடுமுறை முடியும் வரை வெடி வைக்கும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

போட்டோ - http://v.duta.us/CZlf9QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/B9_ZXQAA