[tamil-nadu] - ஊட்டி - கேத்தி இடையே அனைத்து நாட்களும் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

ஊட்டி : கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் மே இறுதி வரை அனைத்து நாட்களும் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ரயில்வே துறை இன்று முதல் மே மாத இறுதி வரை அனைத்து நாட்களும் ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி தினமும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு காலை 9.40 மணிக்கும், 11.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும் இயக்கப்படுகிறது. மறு மார்கமாக கேத்தியில் இருந்து ஊட்டிக்கு 10.30 மணிக்கும், மதியம் 12.40க்கும், மாலை 4 மணிக்கும் இயக்கப்படுகிறது.

இந்த 3 பெட்டிகள் கொண்ட சிறப்பு மலை ரயிலில் முதல் வகுப்பில் 32 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 100 இருக்கைகள் என மொத்தம் 132 இருக்கைகள் உள்ளன. முதல் வகுப்பு கட்டணமாக ஒரு நபருக்கு 400 ரூபாயும், இரண்டாவது வகுப்பு கட்டணமாக 300 ரூபாயும் வசூலிக்கப்படும். ஊட்டி ரயில் நிலையத்தில் பதிவு செய்து டிக்கெட் பெற்றுகொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் மட்டும் கேத்தி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ - http://v.duta.us/RVlzpgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/d7Ut0gAA