[tamil-nadu] - ஐஜி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது உண்மையை மறைத்து வழக்கு போலீஸ்காரருக்கு அபராதம்

மதுரை: உண்மையை மறைத்து, மதுரை ஐஜி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்த போலீஸ்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரியில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்தவர் கோவிந்தசாமி. இடமாறுதலில் தற்போது ராமநாதபுரத்தில் பணிபுரிகிறார். இவருக்கு பதவி உயர்வு மற்றும் அதற்குரிய பணப்பலன்கள் வழங்க ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. அதை போலீஸ் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. அவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கோவிந்தசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இது விசாணைக்கு வந்தபோது, மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனாலும் தனக்கு பதவி உயர்வு மற்றும் பலன்கள் வழங்கவில்லை என

மதுரை தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், நெல்லை டிஐஜி கபில்குமார் சி.சரத்கர், போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் (நெல்லை), ஸ்ரீ நாத் (கன்னியாகுமரி), ஓம்பிரகாஷ் மீனா (ராமநாதபுரம்) ஆகியோருக்கு எதிராக கோவிந்தசாமி நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்....

போட்டோ - http://v.duta.us/eIGYvAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Gq4sgwAA