[tamil-nadu] - காட்பாடியில் ரயில்சேவை ரத்து 42 சிறப்பு பஸ்களில் 2,133 பேர் சென்னைக்கு பயணம்

வேலூர்: அரக்கோணம் அருகே தண்டவாளம் இணைக்கும் பணியால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் 2,113 பேர் காட்பாடியில் இருந்து சென்னைக்கு 42 சிறப்பு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம்- தக்கோலம் தண்டவாளம் இணைப்பு பணிகள் கடந்த 11ம் தேதி நடந்தது. ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் அனைத்து ரயில்களும் காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள் வரை இயக்கப்பட்டன.

அரக்கோணம்- சென்னை மின்சார ரயில்கள் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. ஒரு வாரம் நடந்த சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2ம் கட்ட தண்டவாளம் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் விடுமுறை நாளான நேற்று நடந்தது. இதன் காரணமாக வேலூர்- அரக்கோணம், அரக்கோணம்- பெங்களூரு பாசஞ்சர் ரயில்கள், மற்றும் சென்னை சென்ட்ரல் செல்லும் லால்பாக் அதிவிரைவு ரயில், பெங்களூரு விரைவு ரயில், கோவை- சென்னை விரைவு ரயில், மங்களூர் விரைவு ரயில் ஆகியவை இரு மார்க்கத்திலும் நேற்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டது....

போட்டோ - http://v.duta.us/o5yc7AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/0FV0FwAA