[tamil-nadu] - கோடை விடுமுறை எதிரொலி பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக படகு சவாரி

சிதம்பரம்: கோடை விடுமுறையால் பிச்சாவரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான சுரபுண்ணை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுரபுண்ணை காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று ரசித்து வருகின்றனர். தற்போது வனத்துறை சார்பிலும் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சின்னவாய்க்கால் பகுதியில் அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிக்க முடியும். பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தில் வனப்பகுதியை ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை சார்பில் கருத்தியல் கூடம் அமைக்கப்பட்டு பிச்சாவரத்தில் உள்ள அம்சங்கள் குறித்து படவிளக்கங்களுடன் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மைய வளாகத்தில் சிறுவர் பூங்கா, தங்கும் அறைகள், உணவகம் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சிதம்பரத்தில் இருந்து அருகாமையில் இருப்பதால் பிச்சாவரத்திற்கு வந்து படகு சவாரி சென்று வருகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/mZahwAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/G--SXAAA