[tamil-nadu] - கூ.நல்லூர் தண்ணீர்குன்னத்தில் பாழடைந்து பயமுறுத்தும் 100 ஆண்டு பழமையான சமாதி கட்டிடங்கள்

  • பராமரித்து பாதுகாக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூர் : கூத்தாநல்லூர் அருகே தண்ணீர்குன்னத்தில் 100 ஆண்டுகளை கடந்து இருக்கும் இரண்டு சமாதிகள் பாழடைந்து காண்போரை பயமுறுத்தி கொண்டிருக்கிறது. மர்மங்களை உள்ளடக்கிய அந்த சமாதிகளை பராமரித்து பாதுகாக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த அழகிய கிராமம் தண்ணீர்குன்னம். பல வரலாற்று பெருமைகளை உள்ளடக்கிய இந்த கிராமம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இந்த கிராமத்தில்தான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மங்கள் நிறைந்த இரண்டு பெரிய சமாதிகள் பாழடைந்து காண்போரை பயமுறுத்தி கொண்டிருக்கிறது.

உடையார் சமாதி எங்கே இருக்கிறது என்றால் ஒருவித அச்சத்துடன் அந்த சமாதிகளை அடையாளம் காட்டுகிறார்கள் மக்கள். கூத்தாநல்லூர் திருநாகேஸ்வரம் பிரதான சாலையின் ஓரத்தில் இருக்கும் அந்த பாழடைந்த சமாதிகளைப்பற்றி பல விஷயங்களை சொல்கிறார்கள். பங்களா உடையார் என்று சொல்லப்படும் குறுநில மன்னராக இருந்த ஒரு செல்வந்தர் தன்னுடைய பேரன் 22 வயதில் அகால மரணமடைய, அபூர்வ சக்திகளைக்கொண்ட தன் பேரனை அடக்கம் செய்த தண்ணீர்குன்னத்தில் பிரமாண்ட சமாதியை கட்டி அதற்கு சகல பூஜைகளையும் செய்து வந்ததாக கூறுகிறார்கள்....

போட்டோ - http://v.duta.us/LOb-pwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/YfWiAAAA