[tamil-nadu] - சித்திரை அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் தரிசனத்துக்கு 4 நாள் அனுமதி

  • பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

வத்திராயிருப்பு: சித்திரை அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மே 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களுக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

வருகிற மே 2ம் தேதி பிரதோஷம், 4ம் தேதி சித்திரை அமாவாசை ஆகியவற்றை முன்னிட்டு, 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோடை விடுமுறையால், 4 நாட்களுக்கு பக்தர்கள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால், தாணிப்பாறையில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் குடிக்க தண்ணீர் இல்லை. இதனால், கோயிலுக்கு குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/M1qDcAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gKB9vwAA