[tamil-nadu] - சரக்கு ரயில் பெட்டி கதவுகளுக்கு ரிமோட் பொருத்தப்படுமா ?

  • திறந்து மூடும் நேரம் குறையும்

*வாடிக்கையாளர்களை கவரக்கூடியது

தமிழகத்தில் உள்ள ரயில்வே தண்டவாளங்களுக்கு 100 மி.மீ முதல் 300 மி.மீ வரை ஜல்லிகற்கள் தேவை. அளவு குறையும் இடங்களுக்கு ஜல்லி கற்களை கொண்டு சென்று நிரப்ப “ஜல்லி ரயில்கள்” உள்ளன. இதில் 10 முதல் 20 திறந்த வகை பெட்டிகள் இருக்கும். இந்த பெட்டிகளின் பக்கவாட்டில் கீழ் நோக்கி திறக்கும் கதவுகள் உள்ளன. இவற்றை திறந்து மூட பெட்டிகளின் இரண்டு பக்கங்களிலும் கைச்சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இவற்றை சுழற்றி கதவுகளை திறந்து மூடலாம். இச்சக் கரங்களை சுழற்றும் பணியாளர்கள் நிற்க மேடை இருக்கும். 12 பெட்டிகள் கொண்ட ஒரு ஜல்லி ரயிலின் கதவுகள் திறந்து மூட 24 பணியாளர்கள் வேண்டும். மேலும் அளவு, இடம் கண்காணித்து கையாள உத்தரவிட நான்கு மேற்பார்வை யாளர்கள் தேவை.

குறிப்பிட்ட ஒரு பாதையில் 10 முதல் 15 நாட்கள் தொடர்ந்து இந்த ரயில்கள் வேலை செய்யும். தண்டவாள பராமரிப்பாளர்கள் தான் இந்த பணியை மேற் கொள்கிறார்கள். ஜல்லி ரயில்கள் ஓடும் நாட்களில் அதிக எண்ணிக்கையில் தண்ட வாள பராமரிப்பாளர்கள் இந்த பணியை மேற்கொள்வதால் மற்ற வழக்க மான பணிகள் பாதிப்படைகின்றன. இதனால் முதற்கட்டமாக இரண்டு ஜல்லி ரயில்களுக்கு ரிமோட்டில் இயங்கும் மின் எந்திர கதவுகளை பொருத்தி சோதிக்க ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ரூ 19 கோடியே 3 லட்சம் மதிப்பில் 120 கதவுகள் பொருத்த உலகளாவிய ஒப்பந்த அறிவிப்பை கடந்த ஏப்ரல் முதல் தேதி வெளியிட்டு இருக்கிறது....

போட்டோ - http://v.duta.us/ouIuCgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/-PzzugAA