[tamil-nadu] - திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய செக்யூரிட்டி: சமூக வலைத்தளத்தில் பரவியதால் விசாரணை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு செக்யூரிட்டி ஒருவர் குளுக்கோஸ் ஏற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து நர்ஸ்களிடம் விசாரணை நடத்தி எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிக்கு, செக்யூரிட்டி ஒருவர் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கு குறித்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து, மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த சம்பவம் மருத்துவமனையில் கடந்த வாரம் நடந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட செக்யூரிட்டி மற்றும் நர்ஸ்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, செக்யூரிட்டி அப்போதே மருத்துவமனை வளாகத்தில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். மேலும், சம்பந்தப்பட்ட நர்ஸ்களிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இனி நடந்தால், நர்ஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம்’ என்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழைகள்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறோம். அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால், செக்யூரிட்டிகளே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

போட்டோ - http://v.duta.us/4awzEgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ziOBTwAA