[tamil-nadu] - நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வெளியானது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களிடம் குழந்தைகளை வாங்கி தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த, ராசிபுரம் தட்டாங்குட்டை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலிய உதவியாளர் அமுதவள்ளி(50), ராசிபுரம் நகர கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக பணியாற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன்(53) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்களாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், ஈரோடு மாமரத்துபாளையம் ஹசீனா (26), நிஷா, ஈரோடு சூரம்பட்டி அருள்சாமி (47) உள்ளிட்டோரை போலீசார் கைது செய்யதுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இடைத்தரகர்களாக செயல்பட்ட லீலா மற்றும் செல்வி ஆகியோரும் கைது செய்யட்டனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அமுதவள்ளி பல ஆண்டுகளாக கொல்லிமலையில் இருந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது....

போட்டோ - http://v.duta.us/_PG-9QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/WbMEUQAA