[tamil-nadu] - புஞ்சைபுளியம்பட்டி அருகே ஐயன் கோயிலில் விஷ ஜந்துக்களின் உருவ பொம்மைகளை உடைத்து விநோத வழிபாடு

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள அலங்காரிபாளையம் ஐயன்கோயிலில் விஷ ஜந்துக்களின் உருவ பொம்மையை உடைத்து வழிபடும் விநோத பண்டிகை நடந்தது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தை அடுத்த அலங்காரிபாளையத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐயன்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் 5-வது ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பண்டிகை நடக்கும். 3 மற்றும் 4-வது வாரங்களில் பக்தர்கள் அதிக அளவில் இக்கோயிலுக்கு வருகின்றனர்.

நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 7 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் பாம்பு, தேள், பூரான், பல்லி, சிலந்தி, கிராந்தி உள்ளிட்ட பல்வேறு வகை விஷ ஜந்துகளின் உருவங்கள் மண்ணால் செய்யப்பட்டு 1 செட் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. பக்தர்கள் விஷ ஜந்துகளின் உருவ பொம்மைகளை வாங்கி ஐயன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்களை வழிபட்டு கோயில் முன்பகுதியில் கற்பூரமேற்றி உருவ பொம்மைகளை உடைத்தனர்....

போட்டோ - http://v.duta.us/SPiegAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/h825pgAA