[tamil-nadu] - பருவமழை பொய்த்ததால் கிணற்றுநீரை கொண்டு காய்கறிகள் சாகுபடி

  • நல்லமகசூல் கிடைக்க தொழில்நுட்ப ஆலோசனை வழங்க எதிர்பார்ப்பு

இலுப்பூர்: இலுப்பூர் பகுதியில் பருவமழை பொய்த்ததாலும் கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததாலும் விவசாயிகள் குறைந்த நீரைக்கொண்டு விவசாயிகள் தோட்ட பயிர்களான காய் கறிகளை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். தோட்ட பயிகளில் லாபம் பெற விவசாயிகளுக்கு தரமாக விதை, தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலுப்பூர் பகுதியில் பருவ மழை பெய்யும் காலங்களில் விவசாயிகள் வயல்களில் நெல்,கடலை, கம்பு. பருத்தி, கரும்பு போன்ற பயிற்களை பயிரிட்டாலும் பெரும்பாலான விவசாயிகள் நெல்களையே பயிர் செய்து வந்துள்ளனர். மானாவாரி நிலங்களில் சோளம், கேழ்வரகு மற்றும் பயறுவகைகளை பயிரிட்டு வருகின்றனர் இலுப்பூர் பகுதிகளில் போதிய பருவமழை பெய்து பல ஆண்டுகள் ஆகிறது.

இதனால் பெரும் வறட்சி நிலவுகிறது. கிணற்றில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கிணற்றில் உள்ள குறைந்த நீரை கொண்டு விவசாயிகள் தற்பொழுது காய்கறி பயிர்களான வெங்காயம், வெண்டை, புடலை, பீர்க்கன்.கத்திரி போனறவைகளை பயிரிட துவங்கியுள்ளனர். இதில் ஒரு சில விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்காததாலும் விளைச்சல் குறைந்து ஒரு விதமான வைரஸ் நோய் தாக்கியதால் மருந்துகள் தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியாமல் செடிகளை பிடிங்கி எறிந்து வருகின்றனர். இது குறித்து இலுப்பூர் மணப்பாறை சாலையில் எருதுப்பட்டி பகுதியில் பீர்க்கன் பயிர் செய்த விவசாயிடம் கேட்டபோது, பருமழை காலங்களில் நெல்களை யே பிரதான பயிர்களாக பயிர் செய்யும் நாங்கள் பருவமழை சில ஆண்டுகளாக சரியாக பொழியாததால் நெல் விவசாயம் செய்யவில்லை....

போட்டோ - http://v.duta.us/QcmgRwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Kdnw3gAA