[tamil-nadu] - பொள்ளாச்சி விவகாரம் வழக்கை வாபஸ் வாங்கு... பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ்: சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பாலியல் வழக்கு தொடர்பாக புகார் கொடுத்த பெண்ணை, பார் நாகராஜ் மிரட்டும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொள்ளாச்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

மேலும் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை தாக்கியதாக அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி., போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜ், ஒரு பெண்ணிடம் செல்போனில் வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுக்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த ஆடியோ விவரம்:

நாகராஜ்: என்னை பார் நாகராஜ் என்றால் எல்லோருக்கும் தெரியும். என் பெயரை சொல்லிதான் உன்னிடம் பேச வேண்டுமா? பொள்ளாச்சி சம்பத் பெயரிலும், கோகிலா பெயரிலும் கொடுத்த வழக்கை உடனடியாக வாபஸ் வாங்கிவிட்டு, நீ எடுத்த வீடியோவை ‘டெலிட்’ செய்து விடு...

போட்டோ - http://v.duta.us/hbWi2QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/QOpphgAA