[tamil-nadu] - மேலூர் அருகே போலீஸ் அதிரடி 1915ல் திருடுபோன அம்மன் சிலை 104 ஆண்டுக்கு பிறகு கிடைத்தது: பூசாரி வீட்டு சுவரை உடைத்து மீட்பு

மேலூர்: மேலூரில் 104 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன அம்மன் சிலையை, பூசாரியின் வீட்டு சுவரை உடைத்து மீட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோயிலில் ஒப்படைத்தனர்.மதுரை மாவட்டம், மேலூர் சிவன் கோயில் அருகே உள்ளது திரவுபதி அம்மன் கோயில். பழமையான இக்கோயிலில் 2 அடி உயர முக்கண் உடைய அம்மன் சிலை ஒன்று இருந்தது. ஐம்பொன்னாலான இச்சிலை கடந்த 1915ல் திருடு போனது. அந்த காலக்கட்டத்தில் நாராயணமூர்த்தி, கந்தசாமி ஆகியோர் பூசாரிகளாக இருந்துள்ளனர்.

இது குறித்து அப்போதே மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயிலுக்கு அடுத்தடுத்து பூசாரியாக வருபவர்கள், அச்சிலை திருடு போனது குறித்து தொடர்ந்து போலீசில் புகார் கொடுத்து வந்துள்ளனர். தற்போது பூசாரியாக உள்ள நாராயணன் இச்சிலையை கண்டுபிடித்து தரும்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் முதல் வருவாய் துறையினர் வரை தொடர்ந்து மனுக்களை அளித்து வந்தார். இந்நிலையில், தற்போது பூசாரியாக உள்ள நாராயணனிடம், முருகேசன் என்பவர் வந்து நூறு வருடத்திற்கு முன்பு காணாமல் போன அம்மன் சிலை தனது தாத்தா கந்தசாமி குடியிருந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளார்....

போட்டோ - http://v.duta.us/KctUAwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/FXZG-AAA