[tamil-nadu] - காரியாபட்டி 11வது வார்டில் காட்சிப் பொருளான சுகாதார வளாகம்: கதவுகள், கோப்பைகள் சேதம்

காரியாபட்டி: காரியாபட்டி 11வது வார்டில் உள்ள பள்ளத்துப்பட்டியில் மகளிர் சுகாதார வளாகத்தில் கதவுகள், கோப்பைகள் சேதமடைந்து காட்சிப் பொருளாக உள்ளன. இதனால், பெண்கள் திறந்தவெளிக்குச் செல்லும் அவலம் உள்ளது. மேலும், இந்த வார்டில் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 11வது வார்டில் என்.ஜி.ஓ நகர் மற்றும் பள்ளத்துப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். காட்சிப் பொருளான கழிப்பறை: பள்ளத்துப்பட்டியில் ரூ.12 லட்சத்தில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த கழிப்பறையில் கதவுகள், கோப்பைகள் சேதமடைந்துள்ளன. இதனால், பெண்கள் பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். கழிப்பறை தற்போது முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.

என்.ஜி.ஓ நகரில் கழிவுநீர் தேக்கம்: என்.ஜி.ஓ நகரில் வாறுகால்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதில் துர்நாற்றம் வீசி, பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. கள்ளிக்குடி சாலையில் என்.ஜி.ஓ நகர் மெயின் ரோட்டில் புதிய வாறுகால் பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. இதனால், தனியார் நிலம் வழியாக கழிவுநீர் சென்றது. அவர் வாறுகாலை மறித்து மண்ணைப் போட்டதால், கழிவுநீர் குளம்போல தேங்கிக் கிடக்கிறது. இதில், கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. இப்பகுதி குடிநீர் விநியோகத்துக்காக, கள்ளிக்குடி ரோடு, பள்ளத்துப்பட்டி செல்லும் வழியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் காட்சிப் பொருளாக உள்ளன. எனவே, 11வது வார்டில் உள்ள பள்ளத்துப்பட்டி, என்.ஜி.ஓ நகர் பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/dKNWCQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/TVvcAwAA