[tamil-nadu] - குளத்தூர் அருகே கீழ வைப்பாரில் கடல் சீற்றத்தால் கரை அரிப்பு: மீனவர்கள் பாதிப்பு

குளத்தூர்: குளத்தூர் அருகே கீழவைப்பாரில் கடல் சீற்றத்தால் நாளுக்கு நாள் கரை அரிப்பு அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே கீழ வைப்பார் மீனவக் கிராமத்தில் வசித்து வரும் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் தினமும் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே அருகேயுள்ள சிப்பிகுளம் கடல் பகுதியில் 500 மீட்டர் அளவிலும், கீழ வைப்பார் பகுதியில் 200 மீட்டர் அளவிலும் தூண்டில் வளைவு பாலங்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் கடந்த ஓராண்டாக கீழ வைப்பார் பகுதியில் காணப்படும் கடல் சீற்றம் மற்றும் பயங்கர அலைகளால் கரைகளில் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து அலைகள் சீற்றத்துடன் அதிகரித்ததால் கடலில் இருந்து 40 அடிக்குமேல் அரிப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு கரையோரம் இருந்த ஏலக்கூட மரங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. தொடர் கடல் சீற்றத்தால் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றையொன்று உராய்வதால் சேதமடைந்து வருகின்றன. இதனால் கரையோரம் வைக்கப்பட்டிருந்த ஒரு சில மீனவர்களின் வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளன.இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டது. கடலில் அலைகள் சீற்றத்தால் கரையோரம் நாளுக்குநாள் கரை அரிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏலக்கூடம் கடந்தாண்டு கடலுக்குள் இழுத்துச் செல்லபட்டது....

போட்டோ - http://v.duta.us/kTc4fwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/L5i3KQAA