[tamil-nadu] - கோவை முத்தூட் நிறுவனத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : பெண் ஊழியர் உள்பட இருவர் கைது!

கோவை : கோவையில் 803 சவரன் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கோவை ராமநாதபுரம் பகுதியில் இருக்கக்கூடிய நிதி நிறுவனமான முத்தூட் நிறுவனத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து அங்கிருந்த பெண் ஊழியர்கள் இருவரையும் தாக்கி 803 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொள்ளயடித்து சென்றார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது. கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த இரண்டு பெண் ஊழியர்களான ரேணுகா தேவி மற்றும் திவ்யா என்பவரிடமும் விசாரணை நடைபெற்றது. ரேணுகா தேவி அதே கிளையில் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.

திவ்யா ஊழியர்கள் பற்றாக்குறையால் மற்றொரு கிளையில் இருந்து அன்று ஒரு நாள் மட்டும் பணிக்கு வந்துள்ளார். இருவரிமும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ரேணுகா தேவி முழு ஒத்துழைப்பை தராததால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே முத்தூட் நிறுவனத்திற்கு அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சுரேஷ் என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். கொள்ளையடித்த பின்னர் ஆட்டோவில் ஏறி போத்தனூர் ரயில் நிலையம் சென்ற காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சுரேஷிடம் நடத்திய விசாரணையில் அவர் கொள்ளையடித்தை ஏற்றுக்கொண்டார்....

போட்டோ - http://v.duta.us/YATtTwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/iJ9WwQAA