[tamil-nadu] - சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பட்டியலின தேசிய ஆணையம் நோட்டீஸ்

சென்னை : தமிழக கூடுதல் தலைமைச் செயலரின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து விளக்கம் கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பட்டியலினவருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக கூடுதல் தலைமைச் செயலரான் ஜக் மோகன் சிங் ராஜு ஞாயிறன்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தான் பட்டியலினத்தவர் என்பதால் தன்னுடன் பணியாற்றிய கபீந்தர் சிங், சீனிவாசன், கே.வி.சுவுத்ரி, பிரமோத் குமார் மிஸ்ரா ஆகியோர் தனக்கு எதிராக செயல்பட்டு பதவி உயர்வு வரவிடாமல் தடுப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் அவர் கோரி இருந்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய தியாகராய நகர் துணை ஆணையர் அசோக் குமார், புகாரைப் பெற்று கொண்டதற்கான ரசீது கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ரசீது தேவையில்லை என்றும் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஜக் மோகன் வலியுறுத்தி இருந்தார். ஆனால் எப்ஐஆர் பதிவு செய்யப்படாததால் அன்று மாலையே புகாரை திரும்பப் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணையத்தில் ஜக்மோகன் புகார் அளித்தார். அதன் பேரில் சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள அந்த ஆணையம் ஜக்மோகன் அளித்த புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு ஆணையிட்டுள்ளது.

போட்டோ - http://v.duta.us/bevNJgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/SjYYGgAA