[tamil-nadu] - தேர்தல் பறக்கும் படையின் சோதனை ஓய்ந்ததால்: ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு: தேர்தல் பறக்கும் படையின் சோதனை ஓய்ந்ததால் ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர். இதனால் விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை, உள்ளாடை ரகங்கள், லுங்கிகள், காட்டன் உடைகள் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தமாக விற்பனை செய்யப்படும். இந்த ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கள் கிழமை இரவு துவங்கி, செவ்வாய் கிழமை வரை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் இருந்ததால் பறக்கும் படையின் சோதனை அதிகரித்தது. இதனால் ஜவுளி சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்து விற்பனை மந்தமாக நடைபெற்றது. கடந்த ஏப்., 18ம் தேதி மக்களவை தேர்தல் நடந்து முடிந்ததையொட்டி தேர்தல் பறக்கும் படைகளின் சோதனை ஓய்ந்தது.

இதையடுத்து நேற்றும், இன்றும் நடைபெற்ற சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகளும், தமிழகத்தை சேர்ந்த சில்லரை வியாபாரிகளும் அதிகளவில் வரத்துவங்கினர்....

போட்டோ - http://v.duta.us/wykm7wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/egSYVwAA