[tamil-nadu] - பி.எப்., பணம் வழங்க கோரி உடுமலை நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

உடுமலை: பி.எப்., பணம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஒப்பந்ததாரரை கண்டித்து உடுமலை நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும், ஒப்பந்த நிறுவனம் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்காலிக தொழிலாளர்கள் 108 பேரும், நிரந்தர தொழிலாளர்கள் 99 பேரும் பணி செய்கின்றனர். இவர்களுக்கு ஊதியமாக தினசரி ரூ.350 வழங்கப்படுகிறது. இதில் ரூ.100 வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்.) ஒப்பந்தம் நிறுவனம் பிடித்தம் செய்து கொள்கிறது. அதன்படி, மாதம் 2500 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், தொழிலாளர்களுக்கு பிஎப். பணம் வழங்க வில்லை. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். ஜூன் மாதத்துடன் தற்போதைய நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைவதால், பிஎப் பணம் வழங்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று உடுமலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில், 'எங்களிடம் மாதம் 2500 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த தொகையை பிஎப் கணக்கில் செலுத்தியதற்கான எந்த ரசீதும் இதுவரை தரவில்லை. பிஎப் பணம் கேட்டு விண்ணப்பித்தால் பணம் செலுத்தவில்லை என்கின்றனர். ஏற்கனவே இருந்த ஒப்பந்த நிறுவனம் எங்களிடம் பிடித்த பிஎப் பணத்தை தரவில்லை. தற்போதைய நிறுவனமும் ஒப்பந்தம் முடியும் நிலையில், இதுவரை எங்களிடம் பிடித்தம் செய்த பணத்தின் நிலை என்ன என்று தெரியவில்லை. எனவே, எங்களுக்கு உரிய பணம் கிடைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். போராட்டம் காரணமாக நகராட்சியில் நேற்று துப்புரவு பணியை மேற்கொள்ளாமல் தொழிலாளர்கள் புறக்கணித்தனர்.

போட்டோ - http://v.duta.us/gbeMywAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/yiR44QAA