[tamil-nadu] - பழநியில் துவங்கியது குடிநீர் தட்டுப்பாடு: போர்வெல்கள் சரிசெய்யப்படுமா?

பழநி: பழநி நகரில் குடிநீர் தட்டுப்பாடு துவங்கி உள்ள நிலையில் பழுதடைந்துள்ள போர்வெல்களை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி நகரில் 33 வார்டுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு அணையில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. கோடைகாலம் துவங்கி விட்டதால் இங்கு தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் தண்ணீர் விநியோகம் பழநி நகரின் பல்வேறு இடங்களில் 5 நாட்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுகிறது.

துணி துவைத்தல், பாத்திரம் சுத்தம் செய்தல், குளியல் போன்றவற்றிற்கு போர்வெல் தண்ணீரையே பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் பழநி நகரில் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான போர்வெல்கள் பழுதடைந்துள்ளன. இதனால் போதிய தண்ணீரின்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய அவலநிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பழுதாகி உள்ள போர்வெல்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/D6EBlQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/vSNIdwAA