[tamil-nadu] - மும்பை செல்லும் ஒட்டன்சத்திரம் மூங்கில்கூடை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் தயாரிக்கப்படும் மூங்கில்கூடை மும்பைக்கு விற்பனைக்காக செல்கிறது. ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் பல ஆண்டுகளாக மண்பானைகள் தயாரிக்கும் தொழில் மற்றும் மூங்கில் கூடைகள் தயாரிக்கும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் கூடைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழர்களின் இயற்கை தயாரிப்புகளான மூங்கில் கூடைகளை அண்டைமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கி அதன் முக்கியத்தை அறிந்து, பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது சாப்பாட்டு கூடை, சாப்பாட்டு தட்டு, கோழிக்கூடு, முறம், விசிறி ஆகியவை தயாரிக்கும் பணியில் விருப்பாட்சியை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் கூறுகையில், 'திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூங்கில்கூடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாப்பாட்டுக்கூடை ரூ.40 முதல் ரூ.50க்கும், கோழிக்கூடு ரூ.350க்கும், முறம் ரூ.50க்கும், விசிறி ரூ.40க்கும் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மும்பைக்கு விருப்பாட்சியிலிருந்து லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. பிளாஸ்டிக்பொருட்களின் வரவால் மண்பாண்ட தொழில் மற்றும் கூடைமுடையும் தொழில் நசிந்து வருகிறது. இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் வறுமையில் வாடி வருகிறோம். பாரம்பரிய தொழில்களான மண்பாண்டம் செய்தல், கூடைமுடைதல் ஆகியவற்றை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்' என்று தெரிவித்தனர்.

போட்டோ - http://v.duta.us/acPzdQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/zUm8-AAA