[tamil-nadu] - வத்தலக்குண்டுவில் அரைகுறையாக நிற்கும் தார்ச்சாலை பணி: விரைவில் முடிக்க மக்கள் வலியுறுத்தல்

செம்பட்டி: வத்தலக்குண்டுவில் பல்லாங்குழி சாலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வத்தலக்குண்டு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை செல்வதற்கு மையப்பகுதியாகும். கொடைக்கானல், தேனி, கேரளா, மூணாறு, குமுளி போன்ற பகுதிகளுக்கு வத்தலக்குண்டு சென்றுதான் செல்ல முடியும். அப்படிப்பட்ட வத்தலக்குண்டு பகுதியில் காந்தி நகர் மற்றும் அண்ணாநகர் சாலைகள் பல ஆண்டுகளாக பல்லாங்குழியாகவே உள்ளன. இந்த சாலைகள் கடந்த 8 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு புதிய சாலை அமைக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத் தொடர்ந்து வத்தலக்குண்டு பேரூராட்சி ஒரு கோடி மதிப்பில் சாலை அமைக்க ஏற்பாடு செய்து, ஒப்பந்தம் விடப்பட்டது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கல் நாட்டி பணி தொடங்கப்பட்டது. முதலில் சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்லும் சிறிய பாலத்தை கட்ட ஆரம்பித்தனர்....

போட்டோ - http://v.duta.us/ItTBQAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/WptlcAAA