தமிழக 🏛அரசுப் 🏫பள்ளி 👥மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை🎉

✍இளவேனில்🌄
🏛தமிழக அரசு 🏫பள்ளிகள் மற்றும் அரசு 💸நிதியுதவி பெறும் 🏫பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான 👥மாணவ, மாணவியருக்கு வரும் 📚கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன😯. இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள 📜அரசாணையில், "1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், இளம் பச்சை நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது👍. அதே போன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு சந்தன நிற கால் சட்டையும் சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவியருக்கு கூடுதலக சந்தன நிற மேல் கோட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது👏" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், 🍛சத்துணவு சாப்பிடும் 👥40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன👌 என்றும் கூறப்பட்டுள்ளது.

image credit : http://v.duta.us/r3QcLwAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬