🏛திருச்சியில் இருந்து ✈சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் சென்னையில் தரையிறக்கம்🤔

✍இளவேனில்🌄

✈சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 👥பயணிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 170 பேருடன் 🏛திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலையில் புறப்பட்டது😯. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானத்தின் சரக்கு அறையில் இருந்து புகை😳 வெளியேறியதை விமானி கண்டறிந்ததாக👀 கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை 📲தொடர்பு கொண்டு விமானி உதவி கேட்டதையடுத்து🗣, அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது👍. இதனையடுத்து இன்று காலை ⌚3.40 மணிக்கு ✈விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்😌. விமானத்தின் சரக்கு அறையில் இருந்து புகை வெளியேறியதற்கு 🔌மின் கசிவு காரணமாக இருக்கலாம்😨 என்றும், இதனை சரி செய்த பிறகு இந்த ✈விமானம் இன்று மாலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது👀 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬