🗼அனல்மின் நிலைய சாம்பல் கழிவு பாதிப்பை ஆராய குழு அமைப்பு👥-தேசிய பசுமை தீர்ப்பாயம்⚖

✍இளவேனில்🌄
எண்ணுர் அருகே 🏛தமிழக 🗼மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் வடசென்னை அனல் மின் நிலையம், பக்கிங்ஹாம் கொசஸ்தலை 🌊ஆற்றில் சாம்பலை கொட்டி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி வருகிறது😳. இதனை தடுக்க கோரி சென்னையை சேர்ந்த ரவிமாறன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து, தீர்ப்பாயத்தின் நீதிபதி 🤵ராமகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் நக்கினந்தா கொண்ட அமர்வு, 🏛மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐஐடி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய 👥நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த 👥குழுவானது, சாம்பல் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன, சாம்பல் கழிவுகளை 🌊ஆற்றில் கொட்டியதால் சுற்றுசூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன⁉வட சென்னை 🗼அனல்மின் நிலைய நிர்வாகம் எந்தெந்த சட்ட விதிகளை மீறியுள்ளது🙄, வட சென்னை 🗼அனல்மின் நிலைய நிர்வாகம் செய்த தவறுகளுக்கு எவ்வளவு 💸இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பது என்று ஆய்வு👀 செய்து 📆3 மாதத்திற்குள் விரிவான அறிக்கை📜 அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬